/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்
/
புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்
புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்
புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்
ADDED : மார் 28, 2025 05:19 AM
புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது.
பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சிவகாமி செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, சென்னை தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி இன்று (28ம் தேதி) துவங்கி, வரும் 15ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதுச்சேரி பள்ளி கல்வித் துறையால் நடத்தப்படுகிறது.
புதுச்சேரி பகுதியில் 20 தேர்வு மையங்கள், காரைக்கால் பகுதியில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அதற்கான மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படையினர், நிலையான படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பகுதியில் 146 தனியார் பள்ளிகளை சேர்ந்த 7,278 பேரும், 573 தனித் தேர்வர்களும், காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 497 பேரும், 284 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வின் போது, தடையின்றி மின்சார சேவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வெழுத வரும் மாணவர்கள் மொபைல் மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கூட அனுமதி சீட்டு இல்லாத மாணவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தனித்தேர்வர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து தனியார் கணினி மையம் மூலம் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.