/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
ADDED : ஆக 31, 2025 05:56 AM

புதுச்சேரி: கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லுாரியின் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மகேந்திரன் வரவேற்றார். செயளாலர் சிவராம் ஆல்வா வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பேசுகையில், 'மாணவர்களை தங்களுக்கு தாங்களே வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றவும், நேரத்தை சிறப்பாக நிர்வாகிக்கவும், தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளவும், பிறரை மதிக்கவும், தாங்களே ஒளியாக மாறம் வேண்டும் என்றார்.
டீன் அகடமிக்ஸ் கனிமொழி எம்பவரிங் பியூச்சர் இன்னோவேட்டர்ஸ் ஐ.எப்.இ.டி., என்ற தலைப்பில் உரையாற்றினார். பொருளாளர் விமல், அறங்காவலர்கள் முகமது இலியாஸ், சிந்து, தமீம் அன்சாரி, முகம்மது சுஹைல், பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தமிழ்வேல், சிவானந்தம், சேதுராமன் ஆகியோர் செய்திருந்தனர்.