தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புனே மாணவர்களுக்கு சுடுமண் சிற்ப பயிற்சி

 புனே மாணவர்களுக்கு சுடுமண் சிற்ப பயிற்சி

 புனே மாணவர்களுக்கு சுடுமண் சிற்ப பயிற்சி


ADDED : மே 18, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கைவினை கலைஞர் முனுசாமியிடம் புனே மாணவர்கள் சுடுமண் சிற்ப பயிற்சி பெற்றனர்.

டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பக்கலை புதுச்சேரியில் பாரம்பரிய கலையாக உள்ளது. இந்த கலையை பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி வில்லியனுார் பகுதியில் பயிற்சி அளித்து வருகிறார். புனேவை சேர்ந்த சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், பேஷன் கம்யூனிகேஷன் மாணவர்கள் கல்வி மற்றும் கலாசார பயணமாக புதுச்சேரி வந்துள்ளனர்.

வில்லியனுார் பகுதியில் கைவினை கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமியிடம் பாரம்பரிய கலையான சுடுமண் சிற்பங்களை செய்வது எப்படி என, ஆர்வத்துடன் பயின்றனர்.

இதுகுறித்து முனுசாமி கூறுகையில், 'அழிவில் விளிம்பில் உள்ள களிமண் சிற்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர் வெளிமாநில மாணவர்களுக்கு இந்த பயிற்சியை அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நமது கலையை கொண்டு செல்வது நமது கடமை ஒன்பது விதமான யானை குதிரை விநாயகர் வாத்து உள்ளிட்ட பொம்மைகள் செய்து பயிற்சி அளித்ததாக தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us