தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரை சாலையில் துாய்மைப் பணி

 கடற்கரை சாலையில் துாய்மைப் பணி

 கடற்கரை சாலையில் துாய்மைப் பணி


ADDED : ஜூன் 08, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக புகையிலை ஒழிப்பு தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி நகராட்சி, சுகாதாரத்துறை, தன்னார்வலர்கள் சார்பில், கடற்கரை சாலையில் துாய்மைப் பணி மேற்கொண்டனர்.

உலக புகையிலை ஒழிப்பு தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி நகராட்சி, சுகாதாரத்துறை, தேசிய சுகாதார இயக்கம், அரசு மார்பக புற்று நோய் இயக்கம் மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில், நேற்று புதுச்சேரி கடற்கரை சாலையில் துாய்மை பணி மேற்கொண்டனர்.

இப்பணியை மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ் துவக்கி வைத்தார். மாநில சுகாதார திட்ட நோடல் அதிகாரி கவிப்பிரியா, மாநில ஆலோசகர் சூரியகுமார், நகராட்சி சுகாதார ஆலுவலர் ஆர்த்தி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள், புதுச்சேரி நகராட்சி துாய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை டாக்டர் ஷில்லா சிவஷண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us