ADDED : ஆக 05, 2025 01:46 AM

வில்லியனுார்: ஒதியம்பட்டு புனித சூசையப்பர் குளூனி சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் 10ம் ஆண்டு விழா நடந்தது.
'முயற்சியும் அர்ப்பணிப்பும் நிறைந்த 10 ஆண்டு காலம்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் மேத்தலின் தலைமை தாங்கினார். முன்னாள் தாளாளர் எமிலியானா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெய்ஸ் ஜான் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அரசு செயலர் கேசவன், சீனியர் எஸ்.பி., பிரவின் குமார் திரிபாதி, புதுச்சேரி புனித சூசையப்பர் சபையின் தென் கிழக்கு மாகாண தலைவி லொரைன் பின்டோ, வில்லியனுார் லுார்து அன்னை ஆலய பங்கு தந்தை ஆல்பட் ஆகியோர் கலந்து கொண்டு கடந்தாண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
பத்தாண்டின் வளர்ச்சி குறித்த ஆண்டு இதழ் மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்களை பாராட்டும் விதமாக ஆவணப் படம் வெளியிட்டனர். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மாணவியர் தலைவி அக் ஷரா, துணைத் தலைவி ஆக்னஸ் மெனிட்டா ஆகியோர் நன்றி கூறினர்.