/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை நிறைவு விழா
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை நிறைவு விழா
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை நிறைவு விழா
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை நிறைவு விழா
ADDED : செப் 07, 2025 11:16 PM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ராஷ்டிரிய கர்மயோகி மக்கள் சேவைத் திட்டம் குறித்த முதுநிலைப் பயிற்சியாளர்கள் இரண்டாம் கட்ட பயிற்சி பட்டறை நிறைவு விழா நடந்தது.
இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம், புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மூன்று நாள் ராஷ்டிரிய கர்மயோகி - மக்கள் சேவை திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட மாஸ்டர் பயிற்சியாளர்கள் பயிற்சி பட்டறை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இத் திட்டத்தில் தென்னிந்தியாவில் அமைந்துள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பங்கேற்றனர். திறன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.
நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி பல்கலைக் கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னணி பயிற்சியாளர்கள் வினோத் சிங், துணைச் செயலாளர் கிஷோர் குமார், பதிவாளர் ரஜநீஷ் பூட்டானி, இயக்குநர் அருள் கலந்து கொண்டனர்.