தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மருந்து கடைகள் அடைப்பு : பொதுமக்கள் கடும் அவதி

 மருந்து கடைகள் அடைப்பு : பொதுமக்கள் கடும் அவதி

 மருந்து கடைகள் அடைப்பு : பொதுமக்கள் கடும் அவதி


ADDED : மே 21, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 04:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆன்லைனில் மருந்து விற்பனையை தடுக்கும் வகையில், புதுச்சேரியில் மருந்து கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் மருந்துகள் வாங்க முடியாமல் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.

ஆன்லைன் மூலம் சட்ட விரோதகமாக மருந்து விற்பனை மற்றும் மருந்துகள் அநியாய தள்ளுபடி விற்பனையை தடுப்பது, மருந்து வணிகர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம், நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தது.

அதன்படி நேற்று புதுச்சேரி 4 பிராந்தியங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மருந்தகங்கள் மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அவசர கால மருந்துகளான இன்சுலின், உயிர்காக்கும் மருந்துகள் வாங்குவதற்கு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதில், கல்லுாரி மருந்தகம், தனியார் கிளினிக் மருந்தகங்கள் வழக்கம் போல இயங்கின. மேலும், கிராமப்புறங்களில் உள்ள மருந்து கடைகள் மூடப்பட்டிருந்தால், நகரப்பகுதியில் உள்ள மருந்து கடைகளை பொதுமக்கள் தேடி சென்று கடும் அவதிப்பட்டனர்.

அவசர மருந்துகளை வணிகர் மூலம் பொதுமக்கள் வாங்குவதற்கு மருந்து வணிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us