/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக கோப்பையை வென்ற அணிக்கு முதல்வர் வாழ்த்து
/
உலக கோப்பையை வென்ற அணிக்கு முதல்வர் வாழ்த்து
ADDED : நவ 25, 2025 05:23 AM
புதுச்சேரி: உலக கோப்பை வென்ற பார்வையற்றோர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி:
பார்வையற்றோருக்கான டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது.
இந்திய வீராங்கனைகளின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் அதிரடியான ஆட்டத் திறன் உலக மேடையில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது.
மறக்கமுடியாத இந்த அபார வெற்றி, பல பெண்கள் கனவு காணும் விளையாட்டு பயணத்திற்கு புதிய ஒளியையும் ஊக்கத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து இன்னும் பல புகழ்பெற்ற தருணங்கள் வரவும், வரலாற்றைப் படைத்துக்கொண்டே இருக்கவும் இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

