/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில் துவங்க புதுச்சேரிக்கு வாருங்கள் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்பு
/
தொழில் துவங்க புதுச்சேரிக்கு வாருங்கள் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்பு
தொழில் துவங்க புதுச்சேரிக்கு வாருங்கள் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்பு
தொழில் துவங்க புதுச்சேரிக்கு வாருங்கள் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்பு
ADDED : அக் 09, 2024 05:18 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சலுகைகள் வழங்க உள்ளதால், முதலீட்டார்கள் தொழில் துவங்க முன் வரவேண்டும் என முதல்வர் ரங்கசாமி பேசினார்
தேசிய தர நிர்ணய அலுவலக சென்னை கிளை சார்பில் உலகத் தர நிர்ணய தின நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தர நிர்ணய தென்மண்டல துணை இயக்குநர் பிரவீன்ஹன்னா தலைமை தாங்கினார். சென்னை கிளை தலைமை அதிகாரி பவானி வரவேற்றார்.
நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, தர நிர்ணய பாராட்டு சான்றுகளை வழங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தரம் மிக அவசியம். தரம் இருந்தால்தான் நுகர்வோர் பயன்படுத்துவர். 'மேக் இன் இந்தியா' என பிரதமர் அடிக்கடி கூறுவது உண்டு. தற்போது அது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
தரச்சான்று வழங்கும் அதிகாரிகள் முழு கவனத்துடனும், நம்பகத்தன்மையுடன் செயல்படுவது அவசியம்.
புதுச்சேரியில் தொழிற்சாலைகளுக்கு தரச்சான்று அளிப்பதில் அலைக்கழிப்பு இருக்கக்கூடாது. அப்போதுதான் இளைஞர்கள் அதிகளவில் தொழில் தொடங்க முன் வருவார்கள். அதுபோலவே, தொழிற்சாலைகளில் தரமான பொருள்களை உற்பத்தி செய்வதும் அவசியம். அப்போதுதான் உலகளவில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
வெளிநாட்டு பொருள்களை இறக்குமதி செய்த நம்நாட்டில் தற்போது ராக்கெட் உள்ளிட்ட உதிரி பாகங்கள் கூட தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவை தரமாக இருப்பதாலேயே இந்தியா உற்பத்திக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைக்கிறது. தரம் குறித்த விழிப்புணர்வு அவசியம்.
புதுச்சேரியில் பல தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்பதே அரசின் எண்ணம். சேதராப்பட்டில் தொழில் பூங்கா இடத்தில் தனியார் தொழிற்சாலைகளுக்க நிலம் வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் முன்பு சலுகைகள் அளித்ததால் அதிக அளவில் தொழிற்சாலை வந்தன.
தற்போது, மத்திய அரசின் சலுகைகள் இல்லாததால் முதலீட்டாளர்கள் வருவது குறைந்துள்ளது.
மாநில அரசு சலுகைகள் அளிக்க கவனம் செலுத்தி வருகிறோம். புதிய தொழிற்சாலைகள் தொடங்க முதலீட்டாளர்கள் வரவேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக சேதராப்பட்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொழிற் மனைகளாக பிரித்து வழங்கப்பட உள்ளது என்றார்.
விழாவில், பேராசிரியர் ஜனகராஜன், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய மத்திய கருத்துரைப் பிரிவின் தலைமை அதிகாரி உப்தல்போடா, தர நிர்ணய ் சென்னை கிளை இணை இயக்குநர் அருண் புஷ்ஷகயாலா கருத்துரையாற்றினர்.