ADDED : ஏப் 14, 2026 07:01 PM

புதுச்சேரி: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
என்.ஆர்.காங்., சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி தலைமையில், பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன் கலந்து கொண்டனர்.
பா.ஜ., சார்பில் மாநில தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
காங்., சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., த.வெ.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன், நிர்வாகிகள் புதியவன், ராமு, நேயம் மக்கள் கழகம் சார்பில் மாநில தலைவர் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் துணைத் தலைவர் சீத்தாராமன், பொதுச் செயலாளர் விநாயகம், துணை செயலாளர் சுந்தர், மா.கம்யூ., சார்பில் கொளஞ்சியப்பன், ராமச்சந்திரன், ராஜாங்கம், பெருமாள், வி.சி., சார்பில் அரிமா தமிழன், தேவ பொழிலன் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
