தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜெயிலர் படம் பார்த்த அனுபவம்: பகிர்ந்த முதல்வர் ரங்கசாமி

ஜெயிலர் படம் பார்த்த அனுபவம்: பகிர்ந்த முதல்வர் ரங்கசாமி

ஜெயிலர் படம் பார்த்த அனுபவம்: பகிர்ந்த முதல்வர் ரங்கசாமி


UPDATED : நவ 06, 2026 07:18 PM

ADDED : நவ 05, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:18 PM ADDED : நவ 05, 2026 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தியேட்டரில் ஒலி அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே ஜெயிலர் திரைப்படத்தைப் பார்க்கச் சென்றதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

தொடர்ந்து, செய்தியாளர்கள் முதல்வரிடம் கடைசியாக எப்போது திரைப்படம் பார்த்தீர்கள் எனக் கேட்டதற்கு, கடைசியாக விஜய் நடித்த படத்தைப் பார்த்ததாகவும், தற்போது ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தைப் பார்த்ததாகவும் தெரிவித்தார். மேலும், தியேட்டரில் ஒலி அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அழைத்ததால் படம் பார்க்கச் சென்றதாக கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us