/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி உதவித் தொகையை வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்
/
தீபாவளி உதவித் தொகையை வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்
தீபாவளி உதவித் தொகையை வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்
தீபாவளி உதவித் தொகையை வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : நவ 15, 2024 03:56 AM
புதுச்சேரி: முறைசாரா தொழிலாளர்களுக்கான தீபாவளி உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் அறிக்கை:
முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசு அறவித்த தீபாவளி உதவித் தொகையை, தொழிலாளர் துறை இதுவரை வழங்காததை மா.கம்யூ., கண்டிக்கிறது.
உதவித் தொகைக்கான கோப்பு, கடந்த 29ம் தேதி கவர்னருக்கு சென்றது. சி.ஐ.டி.யூ.,வின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 6ம் தேதி கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். தலைமைச் செயலர் வெளிநாடு சென்றதால், மேலும் ஒரு வாரம் காலதாமதமாகி உள்ளது.
தீபாவளிக்கு முன்பே இப்பணியை முடித்திருக்க வேண்டிய தொழிலாளர் துறை செயலர் மற்றும் ஆணையருக்கு, தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
மாநில பொருளாதார வளர்ச்சியில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட உழைப்பு சந்தை தொடர்பான தொழிலாளர் துறை செயலற்று கோமா நிலையில் உள்ளது.
முறைசாரா தொழிலாளர் நல வாரியம் அமைக்க விதிமுறைகள் கடந்த 2020-21ல் உருவாக்கியபோதிலும், கடந்த மூன்றரை ஆண்டு ஆட்சியில் சிறு முன்னேற்றம் கூட இல்லை. இப்பிரச்னையில் முதல்வர் தலையிட வேண்டும். தீபாவளி உதவித் தொகையை உடன் வழங்க வேண்டும்.
மேலும், தொழிலாளர் துறையை துடிப்புடன் செயல்படும் துறையாக மாற்றிட உரிய அதிகாரிகளை நியமித்தட வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.