கூட்டுறவு கடன் சங்க தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
கூட்டுறவு கடன் சங்க தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
ADDED : பிப் 27, 2024 06:35 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : புதுச்சேரி அரசு குருப் பி மற்றும் சி ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு குருப் பி மற்றும் சி ஊழியர் கூட்டுறவு கடன் சங்கத்தின், 2024 முதல் 2027ம் ஆண்டிற்கான, புதிய இயக்குநர் குழு தேர்வு செய்வதிற்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 20ம் தேதி அறிவிக்கப்பட்டது.
பெரும்பாலான சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் லோக்சபா தேர்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதால், சங்க தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் பங்குபெறும் விதமாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுமதியுடன் சங்க தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என சங்க தலைவர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
