தவளக்குப்பத்தில் கோச்சிங் சென்டர்: த.வெ.க., வேட்பாளர் ராமு வாக்குறுதி
தவளக்குப்பத்தில் கோச்சிங் சென்டர்: த.வெ.க., வேட்பாளர் ராமு வாக்குறுதி
ADDED : ஏப் 03, 2026 10:56 PM

அரியாங்குப்பம்: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த, மணவெளியில் இலவச கோச்சிங் சென்டர் சொந்த செலவில் அமைப்பேன் என, த.வெ.க., வேட்பாளர் ராமு தெரிவித்தார்.
மணவெளி தொகுதி த.வெ.க., வேட்பாளர் ராமு, நேற்று நல்லவாடு மீனவ கிராமங்களில் வீடு, வீடாக சென்று விசில் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர், கடந்த 5 ஆண்டாக நிலவி வரும் குடிநீர், சாலை பிரச்னையை, தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் தீர்த்து வைப்பேன்.
அரசு வேலைக்காக போட்டி தேர்வு எழுதும், ஏழை மாணவர்களுக்கு தவளக்குப்பத்தில் எனது சொந்த செலவில் இலவச கோச்சிங் சென்டர் அமைத்து கொடுப்பேன். நல்லவாடு கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி கொண்டு வருவேன். மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுப்பேன். மீனவர்களுக்கு தனித்தனியாக இன்சூரன்ஸ் வழங்க ஏற்பாடு செய்வேன் என, வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
