/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
/
புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
ADDED : நவ 21, 2024 05:36 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று துவங்கிய சி விஜில் பாதுகாப்பு ஒத்திகையில், டி.ஐ.ஜி., மற்றும் சீனியர் எஸ்.பி., படகில் சென்று ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் கடற்கரை வழியாக தீவிரவாத ஊடுருவல் தடுப்பதை உறுதி செய்யும் வகையில், சி விஜில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கியது. தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து கடலோர காவல் பிரிவு போலீசாருடன், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., பழனிவேல், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று, மீன்பிடி படகுகளில் ஆய்வு செய்தனர்.
சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் கடல் வழியாக வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். சி விஜில் பாதுகாப்பு ஒத்திகையொட்டி, புதுச்சேரி சட்டசபை, கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று இரவு 8:00 மணியுடன் நிறைவு பெறுகிறது.

