ADDED : ஜன 06, 2024 05:10 AM
புதுச்சேரி, | காலாப்பட்டு மருத்துவமனையில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிய கோயம் புத்துாரைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தயாளன். இவர் கடந்த 1ம் தேதி காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்க்கும் போது பைக் காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்ததால், காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த அடையாளங்களை கொண்டு ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் பைக் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அவரை விசாரணை செய்ததில், கோயம்புத்துார் கணேஷ், லேஅவுட் பகுதியை சேர்ந்த ரமேஷ், 45 என தெரியவந்தது. அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.