/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதான இருவரின் ரத்த மாதிரி, கைரேகை பதிவு சேகரிப்பு
/
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதான இருவரின் ரத்த மாதிரி, கைரேகை பதிவு சேகரிப்பு
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதான இருவரின் ரத்த மாதிரி, கைரேகை பதிவு சேகரிப்பு
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதான இருவரின் ரத்த மாதிரி, கைரேகை பதிவு சேகரிப்பு
ADDED : மார் 13, 2024 06:53 AM

புதுச்சேரி : சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இருவரின் ரத்த மாதிரிகள் மற்றும் கைரேகை பதிவுகளை சீனியர் எஸ்.பி. தலைமையிலான குழுவினர் சிறைக்குள் சென்று சேகரித்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி மாயமானார். போலீசார் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 5ம் தேதி அதே பகுதியில் உள்ள வாய்க்காலில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.
முத்தியால்பேட்டையைச் சேர்ந்த அரிக்கிருஷ்ணன் (எ) விவேகானந்தன், 57; காக்கா (எ) கருணாஸ், 19; ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து மருத்துவ ஆய்வுகள், கைரேகை பதிவுகள் எடுக்க வேண்டும். இருவரையும் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருவது தெரிந்தால் பொதுமக்கள் தாக்க கூடும் என்பதால், மருத்துவ குழுவினர் மற்றும் கைரேகை பதிவு சேகரிக்கும் நிபுணர்கள் சிறைக்குள் சென்று பதிவு செய்ய போலீசார் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.
அதைத் தொடர்ந்து, சிறப்பு விசாரணை குழு தலைவர் சீனியர் எஸ்.பி. கலைவாணன், எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையில், அரசு மருத்துவமனை மருத்துவ குழு மற்றும் கைரேகை பதிவு நிபுணர்கள் நேற்று மதியம் காலாப்பட்டு மத்திய சிறைக்குள் சென்றனர்.
அங்கு விவேகானந்தன், கருணாஸ் இருவரின் ரத்த மாதிரிகள், கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது.

