தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பகல் நேரத்தில் வெளியே வர வேண்டாம்: மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

 பகல் நேரத்தில் வெளியே வர வேண்டாம்: மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

 பகல் நேரத்தில் வெளியே வர வேண்டாம்: மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்


ADDED : மார் 15, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், பகல் நேரத்தில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக வெப்ப அலைகள் வீசும் என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால், புதுச்சேரி அரசின் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் சுதாகர், துணை கலெக்டர் கண்ணபிரான் உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் பேசுகையில், 'மார்ச் முதல் மே மாதம் வரை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு சற்று அதிகமாக இருக்கும். அதனால், பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் நண்பகல் 12.00 மணி முதல் 3:00 மணி வரை அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க அறிவுறுத்தினார்.

பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும். நகரில் அனைத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும். மின்தடை புகார் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு சரியான பதிலை கூற வேண்டும்.

ஏப்ரல் மாதம் வரை பள்ளிகள் நடைபெறுவதால் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவ மனைகளில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.

கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு நேரத்தை மாற்றி அமைத்து பணி செய்ய அறிவுறுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழில்துறை மூலம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us