ADDED : ஏப் 16, 2026 11:12 PM

காரைக்கால்: காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள நெல் மூட்டை கிடங்கை கலெக்டர் இஷிதாரட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.காரைக்கால் திருநள்ளாறு சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் உள்ளிட்ட தனிய மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நியைலில், இந்த கிடங்கை கலெக்டர் இஷிதா ரட்டி நேற்று முன்தினம் திடீரென பார்வையிட்டு, அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்கு நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கு, எடைபோடும் இயந்திரம் மற்றும் கட்டட பணிகளை ஆய்வு செய்தார். .பின்னர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை மேலும் மேம்படுத்துவது குறித்து செயல்பாடுகள்,திட்டங்கள் குறித்து விற்பனைக்கூட செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
