ADDED : நவ 13, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், புகையிலை நிறுத்தும் சிகிச்சை பிரிவை கலெக்டர் குலோத்துங்கன் திறந்து வைத்து, ஆய்வு செய்தார்.
லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலை நிறுத்தும் சிகிச்சை பிரிவை கலெக்டர் குலோத்துங்கன் நேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மருத்துவ மனையை ஆய்வு செய்த அவர், வெளிப்புற சிகிச்சை, தொடர் நோய் சிகிச்சை பிரிவுகள் மற்றும் நாய்க்கடி நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.
ஆஷா பணியாளர்களிடம் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களின் எண்ணிக்கை தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டார்.
சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வெள், லாஸ்பேட்டை தலைமை மருத் துவ அதிகாரி நளினி டாக்டர்கள் வெங்கடேஷ், கவிதா வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

