/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீட் தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு
/
நீட் தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு
ADDED : மே 02, 2025 05:00 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 4ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள மையங்களில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரியில் வரும் 4ம் தேதி 8 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் கலெக்டர் குலோத்துங்கன் தேர்வு எழுதும் மையங்களான தாகூர் கலைக் கல்லூரி, ஜிப்மர், கேந்திர வித்யாலயா பள்ளி மற்றும் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.இம் மையங்களில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விசிறி வசதி. போதிய வெளிச்சம் சி.சி.டி.வி கேமராக்கள். ஜாமர் கருவி. பயோ மெட்ரிக் கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
மேலும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், மின்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகள் தயார் நிலையில் உள்ளார்கள், தேர்வு நடைபெறும் அன்று தேர்வு மையங்களுக்கு தேர்வாளர்கள் செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தார்.
சீனியர் எஸ்.பி., கலைவாணன், கல்வித்துறை இனை இயக்குனர் சிவகாமி மற்றும் அந்தந்த பள்ளி, கல்லூரியின் முதல்வர்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.