/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
/
பாகூர் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 04, 2025 01:38 AM

பாகூர்: பாகூரில் உள்ள அரசு துறை அலுவலகங்கள் மற்றும் பள்ளியில், கலெக்டர் குலோத்துங்கன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பாகூரில் உள்ள பத்திர பதிவு துறை அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர் குலோத்துங்கன், அனைவரும் பணிக்கு வந்துள்ளார்களா, சி.சி.டி.வி கேமராக்கள் இயங்குகின்றனவா, பொது மக்களுக்கு குடிநீர், காற்றோட்ட வசதி, இருக்கைகள் வசதிகள் போதுமான அளவில் உள்ளதா, பொது மக்களை அதிக நேரம் காக்க வைக்காமல் உடனுக்குடன் பணிகள் செய்து முடிக்கப் படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கலெக்டர் குலோத்துங்கன், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை குறித்தும், போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்து, பொது மக்களிடம் மருத்துவ சேவை குறித்தும் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, பாகூரில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வந்தார்களா, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, மாணவிகளிடம் பாடம் சம்மந்தமான கேள்விகளை எழுப்பி, அவர்களின் திறன்களை சோதனை செய்தார்.
பின் கலெக்டர், மாதம் ஒரு முறை பெற்றோர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்திட வேண்டும் என ஆசிரியர்களிடம் உத்தரவிட்டார்.

