/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுரங்கப்பாதை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
/
சுரங்கப்பாதை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
சுரங்கப்பாதை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
சுரங்கப்பாதை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 02, 2024 10:46 PM

பாகூர்: சோரியாங்குப்பம் கிராமத்தில் புறவழிச்சாலையை கடந்து செல்ல, சுரங்கப் பாதை அமைப்பது தொடர்பாக, கலெக்டர் குலோத்துங்கன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை, சோரியாங்குப்பம், குருவிநத்தம் கிராமம் வழியாக கடந்து செல்கிறது. இதற்காக, சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்று நவாப்தோப்பு பகுதியில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
இதனால், அங்கு கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 750 ஏக்கர் விளை நிலங்கள், பாகூர், குருவிநத்தம், பெரியார் நகர் கிராம சுடுகாட்டுப்பாதை, ஆற்று திருவிழா நடைபெறும் பகுதியும் முழுதும் காணாமல் போய்விடும்.
விவசாயிகள், பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் சாலை பணி மேற்கொள்ள வேண்டும்.
அங்கு, விபத்து ஏற்படாமல் இருக்க, சுரங்கப் பாதை அமைத்து வர வேண்டும் என, அப்பகுதியினர் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர்.
அதையடுத்து, புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் நகாய் திட்ட அதிகாரிகளுடன் சோரியாங்குப்பம் கிராமத்திற்கு சென்று புறவழிச்சாலை பணியை ஆய்வு செய்தனர்.
அப்போது, பொது மக்கள் புறவழிசாலை கடந்து செல்லும் வகையில், சுரங்கப் பாதை அமைப்பது குறித்து நகாய் திட்ட அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
பின், உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் கலெக்டர் உறுதியளித்து சென்றார்.

