/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அவசர நிலையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அழைப்பு கலெக்டர் குலோத்துங்கன் தகவல்

ADDED : நவ 27, 2024 05:39 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் அவசர நிலையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் வரும், 29ம் தேதி வரை, கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில், அவரச நிலையை எதிர்கொள்ள பல்வேறு துறைகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இதில் கலெக்டர் கூறியதாவது:
அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்கக்கூடிய, நிவாரண மையங்களான பள்ளிகளின் கட்டடங்களையும், தேவையான உணவுப்பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மழைநீர் வெளியேற்றும் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீன்வளத்துறையினர் மழை வெள்ள காலங்களில் படகுகள் இயக்குபவர்கள் அவசரத்திற்கு பயன்படுத்த ஏதுவாக, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளி, முதியோர், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளில் தேவை உள்ளோரை தெரிந்து கொண்டு, நிவாரண மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்க வைத்து உணவு வழங்க வேண்டும்.
அவசர நிலையை, எதிர்கொள்ள அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.