/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்புரவு ஊழியர்களுக்கு முழு ஊதியம் கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தல்
/
துப்புரவு ஊழியர்களுக்கு முழு ஊதியம் கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தல்
துப்புரவு ஊழியர்களுக்கு முழு ஊதியம் கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தல்
துப்புரவு ஊழியர்களுக்கு முழு ஊதியம் கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தல்
ADDED : செப் 27, 2025 02:26 AM

புதுச்சேரி : திடக்கழிவுகளை பிரித்தெடுத்தல் மற்றும் குப்பைகளை கொண்டு செல்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.
உழவர்கரை நகராட்சி மற்றும் அனைத்து கொம்யூன் ஆணையர்கள், குப்பைகளை சேகரிக்கும் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், 'மறுசுழற்சி செய்வதற்கு ஏதுவாக குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும். குப்பைகளை வண்டியில் கொண்டு செல்லும் போது சாலைகளில் சிதறாமலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கொண்டு செல்ல வேண்டும். குப்பைகளை சேகரிக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
துப்புரவு ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான தடுப்பூசி, காலணிகள், பூட்ஸ் மற்றும் சீருடைகள், ஐ.டி., கார்டு, கையுறைகள், முகக் கவசங்கள் அளிக்க வேண்டும்.
சுகாதாரமான முறையில் குப்பைகளை கையாள்வது தொடர்பாக மாதம் ஒரு முறை பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு மாத ஊதியம் முழுமையாக வழங்க வேண்டும். மழைக்காலம் நெருங்குவதற்குள், வாய்க்கால்களில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்' . ஒரு முறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்க கொம்யூன் ஆணையர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.