தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு கலெக்டர் குலோத்துங்கன் பாராட்டு

 ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு கலெக்டர் குலோத்துங்கன் பாராட்டு

 ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு கலெக்டர் குலோத்துங்கன் பாராட்டு


ADDED : நவ 30, 2025 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஒதுக்கப்பட்ட பணியினை 100 சதவீதம் செய்து முடித்த, ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகள் மூன்று பேரை கலெக்டர் குலோத்துங்கன் பாராட்டினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகள், வீடுகளுக்கு நேரடியாக செ ன்று விண்ணப்ப படிவங்களை திரும்ப பெற்று, அதனை ECINET என்ற செய லியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

அதன்படி, ஏம்பலம் தொகுதியில் எண் 4ன் ஓட்டுச்சாவடி நிலைய அதிகாரி ரமேஷ், கதிர்காமம் தொகுதியில் எண்- 5ன் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரி ஜெயக்குமார், 16ன் ஓட்டுச் சாவடி நிலை அதிகாரி மஞ்சுநாத் ஆகிய மூன்று பேரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியினை 100 சதவீதம் செய்து முடித்தனர்.

அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு சால்வை அணிவித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் பாராட்டினார். சப் கலெக்டர் சிவசங்கரன் உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us