/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
காரைக்கால் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : அக் 08, 2025 07:19 AM

காரைக்கால்: காரைக்கால், அக்கரை வட்டம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ரவிபிரகாஷ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஒன்றாம் வகுப்பு மாணவர்களிடம் வாசிக்குமாறும், சில மாணவர்களை அழைத்து பாடப் புத்தகத்தில் உள்ள கேள்விகளை கேட்டும் மற்றும் அவர்களின் கணித திறனை அறிந்து கொண்டார்.
மேலும் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.
ஆசிரியர்கள் எவ்வாறு பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள் என்று மாணவர்களுடன் அமர்ந்து பாடங்களை கவனித்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு உணவின் தரத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.கழிவறை மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கலெக்டர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், கலெக்டர் செயலர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.