/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீரால் பாதித்த பகுதிகளில் கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு
/
கழிவுநீரால் பாதித்த பகுதிகளில் கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு
கழிவுநீரால் பாதித்த பகுதிகளில் கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு
கழிவுநீரால் பாதித்த பகுதிகளில் கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 24, 2025 03:07 AM

வில்லியனுார்: கழிவுநீர் புகுந்த கோபாலன்கடை அம்மா நகர் குடியிருப்பு பகுதியை கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஊசுடு தொகுதி, குருமாபேட்டை பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கு பின்புறம் அமைந்துள்ள கோபாலன் கடை, அம்மா நகர் பகுதியில் கனமழை காரணமாக குப்பை கிடங்கு பகுதியில் இருந்த கழிவுநீர் வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
அப்பகுதியில் துார்நாற்றம் வீசியதால், அங்கு வசிக்கும் மக்கள் கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து முறையிட்டனர்.
அதன்பேரில், கலெக்டர் குலோத்துங்கன், சப் கலெக்டர் குமரன், தாசில்தார் சேகர், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், பொதுப்பணித்துறை நீர் பாசனகோட்ட பொறியாளர்கள் கொண்ட குழுவினர் கோபாலன்கடை மற்றும் அம்மா நகர் பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அம்மா நகர் மக்கள் பாதிக்காத வகையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கழிவுநீரை, உடனடியாக வெறியேற்றிடவும், தெருக்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்து, சுத்தப்படுத்தவும் உத்தவிட்டார்.
தொடர்ந்து குப்பை கிடங்கு பகுதியில் விழுந்துள்ள மதில் சுவரை சரிசெய்து, அதனை ஒட்டிய பகுதியில் புதிதாக சிமென்ட் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி, அதனை ஊருக்கு வெளியே செல்லும் கழிவுநீர் வாய்க்காலுடன் இணைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

