/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரபல ரவுடிக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு
/
பிரபல ரவுடிக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 15, 2025 03:19 AM

புதுச்சேரி: பிரபல ரவுடிக்கு குண்டாஸ் சட்டம் விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
புதுச்சேரி ரெயின்போ நகரில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல தாதா தெஸ்தானின் மகனான ரிஷி, திடீர் நகர் தேவா, ஜெ.ஜெ.,நகர் ஆதி ஆகியோர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் ரெயின்போ நகரை சேர்ந்த பிரபல ரவுடியான சிவசங்கர், 32,உள்பட 10க்கும் மேற்பட்டோரை பெரியகடை போலீசார் கைது செய்து காலாப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், கைதான சிவசங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கிழக்குப்பகுதி போலீஸ் எஸ்.பி., இஷா சிங், கலெக்டர் குலோத்துங்கனுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதையேற்று அவர், சிவசங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.