/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை போலீசாருக்கு கலெக்டர் அறிவுரை
/
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை போலீசாருக்கு கலெக்டர் அறிவுரை
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை போலீசாருக்கு கலெக்டர் அறிவுரை
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை போலீசாருக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : அக் 16, 2024 06:53 AM

புதுச்சேரி, : போதை பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில், போலீஸ் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோ சனை கூட்டம் நடந்தது.
போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.
சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, கல்விதுறை இணை இயக்குனர் சிவகாமி, காவல் துறை, கடலோர காவல்படை, உளவுத்துறை, சுகாதாரத் துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, வேளாண்துறை உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், போதை பொருட்கள் புழக்கம், கடத்தல், விற்பனையை தீவிரமாக கண்காணித்து தடுத்தல், போதை பொருளுக்கு எதிரான ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஊக்குவித்தல், பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல், ஆகிவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
தொடரந்து, ஒவ்வொரு துறை அதிகாரியின் கருத்துக்களையும் கலெக்டர் கேட்டறிந்தார்.
போதை பொருட்கள் விற்பனை செய்யும் சந்தேகமான இடங்களில் போலீசார் தினமும் ரோந்து பணி செல்ல வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.