/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
ADDED : டிச 03, 2025 05:54 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் சென்று கள ஆய்வு செய்து, சதவீதத்தை மேலும் உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எந்த வாக்காளரையும் விட்டு விடாமல் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை 100 சதவீதம் பூர்த்தி செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.
மேலும் சிறப்பாக செயல்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை பாராட்டினார். அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதன் தொடர் நிகழ்வாக உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களின் பணிகளை துரிதப்படுத்துமாறும் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினா ர். கூட்டத்தில் சப் கலெக்டர் இஷிதா ரதி மற்றும் தேர்தல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

