/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூ.புதுக்குப்பம் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
/
மூ.புதுக்குப்பம் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 19, 2025 03:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : மூ.புதுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில், கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆசிரியர்கள் , ஊழியர்களின் வருகை குறித்து ஆய்வு செய்த அவர் மாணவர்களுடன் கலந்துரையாடி, கற்றல் திறனை பரிசோதித்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுத்தமான குடிநீர், கழிப்பறை, காற்றோட்டம், வெளிச்சம், மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
தலைமை ஆசிரியர் ரோசிலினா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.