ADDED : ஏப் 15, 2025 04:18 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: புதுச்சேரி நல்லுார்பேட் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன், 63, இவர், தவளக்குப்பம் தனியார் வேளாண்மை கல்லுாரியில் துாய்மை பணியாளராக கடந்த 7 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் கல்லுாரியில் வேலை செய்து கொண்டிருந்தார். கல்லுாரி கட்டடத்தின் மேலே இருந்து இரும்பு பைப் கீழே இறக்கினார். அப்போது, அருகில் சென்ற உயரழுத்த மின் கம்பியில், பைப் உரசியது. அப்போது மின்சாரம் பாய்ந்து, அவர் துாக்கியெறிப்பட்டார்.
அதில் பலத்த காயமடைந்த அவரை, கல்லுாரியில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
