மொபைலில் மூழ்கியதால் கண்டிப்பு : கல்லுாரி மாணவி தற்கொலை
மொபைலில் மூழ்கியதால் கண்டிப்பு : கல்லுாரி மாணவி தற்கொலை
ADDED : மே 22, 2026 02:35 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மொபைல் போனில் மூழ்கி இருந்ததை தந்தை கண்டித்ததால் கல்லுாரி மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, வம்பாகீரப் பாளையம், முத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம், மீனவர். இவரது மகள் தனுஜா, 18; பாக்கமுடையான்பேட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு தனுஜா மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார். அதனை அவரது தந்தை ஆறுமுகம் கண்டித்தார். இதனால், மன முடைந்த தனுஜா வீட்டின் அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
