/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் இழுத்து செல்லப்பட்ட கல்லுாரி மாணவர்கள் மீட்பு
/
கடலில் இழுத்து செல்லப்பட்ட கல்லுாரி மாணவர்கள் மீட்பு
கடலில் இழுத்து செல்லப்பட்ட கல்லுாரி மாணவர்கள் மீட்பு
கடலில் இழுத்து செல்லப்பட்ட கல்லுாரி மாணவர்கள் மீட்பு
ADDED : ஜூன் 04, 2025 12:24 AM
புதுச்சேரி,: பழைய துறைமுகம் அருகே கடலில் இழுத்து செல்லபட்ட கல்லுாரி மாணவர்களை கடலோர பாதுகாவலர்கள் மீட்டனர்.
புதுச்சேரி கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள், அடிக்கடி அலையில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து, அரசு மூலம் கடற்கரை பகுதிகளில் ஆபத்தான கடல் பகுதி, யாரும் குளிக்க வேண்டாம் என, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எச்சரிக்கையை மீறி சுற்றுலா வரும் இளைஞர்கள் கடலில் குளிப்பது தொடர்கிறது. கடல் அலைகளில் சிக்குபவர்களை காப்பாற்ற சுற்றுலா கடலோர பாதுகாவலர்கள் (லைப் கார்டு) நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அலையில் சிக்கியவர்களை காப்பாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்களான ஹேமநாதன், 21; அவரது நண்பர் லோகேஷ், 21; ஆகியோர் நேற்று முன்தினம் புதுச்சேரி சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று புதுச்சேரி பழைய துறைமுகம் கடற்கரைக்கு சென்று, குளித்துள்ளார். அப்போது ராட்சத அலையில் சிக்கிய இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.
இதைகண்ட கடலோர பாதுகாவலர்கள் கடலில் இறங்கி, தண்ணீரில் தத்தளித்த இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின், ஒதியஞ்சாலை போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.