தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கர்னல் சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட்: புதுச்சேரி அணி முன்னிலை

கர்னல் சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட்: புதுச்சேரி அணி முன்னிலை

கர்னல் சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட்: புதுச்சேரி அணி முன்னிலை


ADDED : அக் 17, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : கர்னல் சி.கே.நாயுடு கோப்பைக்கான போட்டியில் புதுச்சேரி அணி 10 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும், 23 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 4 நாள் கர்னல் சி.கே. நாயுடு கோப்பை போட்டி, கடந்த 13ம் தேதி துவங்கி இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

புதுச்சேரி சீகெம் மைதானம் 2ல் தொடங்கிய போட்டியில் புதுச்சேரி மற்றும் அசாம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அசாம் அணி 95.4 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணியின் நிதின் பிரணவ் 5 விக்கெட் எடுத்தார். மழையின் காரணமாக ஆட்டம் தொடர்ந்து பாதிக்கப்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து ஆடிய புதுச்சேரி அணி 70.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 302 ரன்கள் எடுத்து 42 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் ஆட்டம் முடிவுற்றது. புதுச்சேரி அணியின் ஜஸ்வந்த் �ராம் 143 ரன்கள் எடுத்தார்.

பவுலிங்கில் 5 விக்கெட் எடுத்த நிதின் பிரணவ் 97 ரன்கள் எடுத்தார். பேட்டிங் 3 புள்ளிகள், பவுலிங் 3 புள்ளிகள், முன்னிலைக்கு 3 புள்ளிகள் உட்பட மொத்தம் 10 புள்ளிகள் புதுச்சேரி அணி பெற்றது. இந்த தொடரின் 2 வது ஆட்டம் வரும் 20ம் தேதி சீகெம் மைதானம் 2ல் மிசோரம், புதுச்சேரி அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us