ADDED : பிப் 22, 2026 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதி வண்ண அருவி ஓவியக் கலைக் கூடத்தில் ஓவியர் சீராளன் ஜெயந்தனின் வண்ண ஓவியங்கள் கண்காட்சி நேற்று துவங்கியது.
கண்காட்சியை ஓவியர் ஸ்ரீதரன், கவிஞர் அமிர்தம் சூரியா மற்றும் பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில் ஓவியர்கள் சீராளன் ஜெயந்தன், மாதவ் மோகன் மற்றும் லின்சி ஜோசி ஆகியோரின் வண்ண ஓவியங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில், கவிஞர் மனுஷி, மொழிபெயர்ப்பாளர் சீனு தமிழ்மணி, ஓவியர்கள் ஆனந்த வேலு, முரளிதரன், சரவணன், காமராஜ், புகழேந்தி, புதுச்சேரி தமிழ்ச் சங்க துணைத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சி வரும் 1ம் தேதி வரை நடக்கிறது.

