டி.என்.பாளையம் அரசு பள்ளியில் வண்ணங்களின் தின விழா
டி.என்.பாளையம் அரசு பள்ளியில் வண்ணங்களின் தின விழா
ADDED : பிப் 04, 2026 05:25 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, டி.என்.பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வண்ணங்களின் தின விழா நடந்தது.
தலைமையாசிரியர் அருள் தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். விழாவில், முன் மழலையர் வகுப்பு மாணவர்கள் பல வண்ணங்களில் உருவாக்கிய கைவினை பொருட்களை அழகிய வடிவில் காட்சிப்படுத்தி, அதன் வண்ணங்களை விளக்கினர். இதில், ஆசிரியர்கள் பாலமுருகன், சுப்பிரமணி, ஜோதி சண்முகபிரியா, சுப்பிரமணியன், லட்சுமி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மனோசித்ரா மற்றும் மஞ்சு ஆகியோர் செய்திருந்தனர்.
