/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கர வித்யாலயா பள்ளியில் வண்ணங்கள் தின விழா
/
சங்கர வித்யாலயா பள்ளியில் வண்ணங்கள் தின விழா
ADDED : மார் 08, 2026 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, பள்ளி நிர்வாகி பட்டாபிராமன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் தர்ம சம்வர்தனி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கவிதா பழனிவேல் பங்கேற்று பேசினார்.
விழாவில், பள்ளியின் மழலையர் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரை மாணவர்களின் வண்ணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள், பெற்றோர்கள் பார்வைியிட்டனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். பள்ளி தொடக்க நிலை வகுப்புக்களுக்கான பொறுப்பு ஆசிரியர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

