தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : நவ 06, 2026 07:21 PM

ADDED : நவ 06, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:21 PM ADDED : நவ 06, 2026 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதுச்சேரி அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 21 முதல் 23, 2026 வரை நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 21 முதல் 25 நடைபெற்றது.அதனை தொடர்ந்து புள்ளியியல் ஆய்வாளர், வேளாண் அதிகாரி, வேளாண் அதிகாரி - பொறியியல் மற்றும் வேளாண் அதிகாரி - நில நீரியல் ஆகிய பதவிகளுக்கான தற்காலிகத் தேர்வுப் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்குகளின் காரணமாக சில மனுதாரர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் காலிப்பணியிடங்கள் முத்திரையிடப்பட்ட உறைகளில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், எஞ்சியுள்ள நுாலக மற்றும் தகவல் உதவியாளர், தொழில்நுட்ப அதிகாரி, மேல் பிரிவு கிளார்க் மற்றும் கள மேற்பார்வையாளர் ஆகிய பதவிகளுக்கான முடிவுகள் பின்னர் தனித்தனியாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us