/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நகரப்பகுதியில் கமாண்டோ படை ரோந்து
/
புதுச்சேரி நகரப்பகுதியில் கமாண்டோ படை ரோந்து
ADDED : ஏப் 13, 2025 05:24 AM

புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் கமாண்டோ படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் - இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் காவல்துறை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் நேற்று இரவு புதுச்சேரி நகர் பகுதிகள், ஒயிட் டவுன், கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் ரவுடிகள் வீடுகளில் போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். உருளையன்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலும், முத்தியால்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலும் போலீசார் ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

