/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கம்யூ., மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவு நாள்
/
கம்யூ., மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவு நாள்
ADDED : ஜன 19, 2025 06:09 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கம்யூ., மூத்த தலைவர் ஜீவானந்தம் சிலைக்கு அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
புதுச்சேரியில் கம்யூ., மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் சாரம், அவ்வை திடலில் உள்ள ஜீவானந்தம் சிலைக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல இ.கம்யூ., சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன், மாநில துணை செயலாளர் சேது செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.