
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : சூரமங்கலம் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதி, சூரமங்கலம் வி.வி.ஆர்.நகரில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலைக் கழகம் சார்பில், ரூ. 36 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு பணியினை துவக்கி வைத்தார்.
ஆதிதிராவிட மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் சிவகுமார், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

