நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துாரில் தார்சாலை அமைக்கும் பணியை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கரையாம்புத்துார் வயல்வெளி, மருத்துவமனை சாலைகள் போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் சேதமடைந்தன. இதையடுத்து ரூ. 23 லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பிக்கப்பட உள்ளது. இப்பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திக்கேயன், உதவிப்பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

