ADDED : மார் 04, 2024 05:35 AM

அ நிறம் | அளவு
பாகூர் : பாகூர் அடுத்தகுருவிநத்தம், இருளஞ்சந்தை, உச்சிமேடு, கீழ்பரிக்கல்பட்டு, மேல்பரிக்கல்பட்டு,ஆராய்ச்சிக்குப்பம் ஏரி, சித்தேரி, மணப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தாங்கல் மற்றும் பாசன வாய்க்காலில் உள்ள மதகுகள் சேதமடைந்துள்ளதால், நீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு மூலம் ரூ. 41 லட்சத்து 37 ஆயிரம் மதீப்பீட்டில் சேதமடைந்த மதகுகள் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
குருவிநத்தம் துாக்குபாலம் அருகே நடந்த விழாவிற்கு, செந்தில் குமார் எம்.எல்.ஏ.,பங்கேற்றுபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இதில், பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு இளநிலை பொறியாளர் ஜெயரமணன் மற்றும் தி.மு.க., தொகுதி நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
