தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க ஆணையர் எழில்ராஜன் ஆய்வு

 குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க ஆணையர் எழில்ராஜன் ஆய்வு

 குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க ஆணையர் எழில்ராஜன் ஆய்வு


ADDED : நவ 30, 2025 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூனில் புயல் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆணையர் எழில்ராஜன் நேற்று ஆய்வு செய்தார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக புதுச்சேரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை யொட்டி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து கிராமங்களில் கனமழையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, மேல்நிலை நீர்தேக்கத்தோட்டியில் ஜெனரேட்டர்கள், குடிநீர் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதனை ஆணையர் எழில்ராஜன் நேற்று ஆய்வு செய்தார்.

கூனிச்சம்பட்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வை யிட்ட ஆணையர், மின் இணைப்பு தடைப்பட்டாலும் குடிநீர் விநியோகத்தை ஜெனரேட்டர்கள் மூலம் வழங்க வேண்டும்.

அதற்கான டீசல் உள்ளிட்ட தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

இதில், உதவி பொறியாளர் மல்லிகா அர்ஜூனா மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட அனைத்து கிராமங்களில் ஆய்வு செய்து, குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் கவனித்து கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us