/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாதானுாரில் கழிவுநீர் தேங்கிய பகுதியில் கமிஷனர் ஆய்வு
/
வாதானுாரில் கழிவுநீர் தேங்கிய பகுதியில் கமிஷனர் ஆய்வு
வாதானுாரில் கழிவுநீர் தேங்கிய பகுதியில் கமிஷனர் ஆய்வு
வாதானுாரில் கழிவுநீர் தேங்கிய பகுதியில் கமிஷனர் ஆய்வு
ADDED : டிச 17, 2024 05:19 AM

திருக்கனுார்: வாதானுாரில் சாலைகளில் கழிவுநீர் தேங்காமல் தடுக்க, புதிய வாய்க்கால் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க கமிஷனர் எழில்ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
திருக்கனுார் அடுத்த வாதானுார்காலனியில் 'ட' வடிவ வாய்க்கால் மூலம் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால், வாய்க்கால் மூலம் செல்லும் கழிவுநீர் சென்று சேருவதற்கான போதிய இடவசதி இல்லாததால், கழிவுநீர் சாலைகளில் தேங்கி வருகிறது.
இதற்கிடையே, கழிவுநீரை அருகிலுள்ள குளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பாட்கோ மூலம் புதிதாக 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், அப்பணியும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதைகண்டித்து, மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவின் பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து கமிஷனர் எழில்ராஜன் தலைமையில் அதிகாரிகள் நேற்று கழிவுநீர் தேங்கிய பகுதியை பார்வையிட்டு, அதனை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, பாட்கோ மூலம் அமைக்கப்பட்டு வரும் வாய்க்கால் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாட்கோ இளநிலை பொறியாளர் முரளியிடம் அறிவுறுத்தப்பட்டது. இதில், கொம்யூன் உதவி பொறியாளர் மல்லிகா அர்ஜூனா மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

