/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை பகுதியில் 40 பன்றிகள் பிடிப்பு மண்ணாடிப்பட்டு ஆணையர் அதிரடி
/
திருபுவனை பகுதியில் 40 பன்றிகள் பிடிப்பு மண்ணாடிப்பட்டு ஆணையர் அதிரடி
திருபுவனை பகுதியில் 40 பன்றிகள் பிடிப்பு மண்ணாடிப்பட்டு ஆணையர் அதிரடி
திருபுவனை பகுதியில் 40 பன்றிகள் பிடிப்பு மண்ணாடிப்பட்டு ஆணையர் அதிரடி
ADDED : ஜன 10, 2025 05:49 AM

திருபுவனை: திருபுவனை பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 40க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருபுவனை தொகுதியில் உள்ள திருவாண்டார்கோவில், கொத்தபுரிநத்தம் , திருபுவனை, கலிதீர்த்தாள்குப்பம், திருபுவனைபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிந்தன.
இதனால் அப்பகுதிகளில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. விவசாய பயிர்களையும் பன்றிகள் நாசனம் செய்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து ஆணையர் எழில்ராஜன், பன்றிகளை பிடிக்க உத்தர விட்டார். அதன்படி விழுப்புரம் பகுதியில் இருந்து பன்றி பிடிப்பதில் கைதேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த 40க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.
ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உடனிருந்தனர்.
ஆணையர் எச்சரிக்கை
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகளை பட்டியில் அடைத்து பராமரிக்காமல் வெளியே திரிய விடும் ஊரிமையாளர்கள் மீது கொம்யூன் பஞ்சாயத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் எச்சரித்தார்.