/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளத்தில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
/
உப்பளத்தில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
உப்பளத்தில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
உப்பளத்தில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
ADDED : ஜன 18, 2024 03:52 AM

புதுச்சேரி: வாணரப்பேட்டையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
உப்பளம் தொகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கதாவரவியல் பூங்கா ஆட்டுப்பட்டியிலும், வாணரப்பேட்டை தாமரை நகரிலும் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
வாணரப்பேட்டை தாமரை நகரில் ஆழ்துளை குழாய் கிணறு பணிகள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆழ்துளை கிணறு பயன்பாட்டினை துவக்கி வைத்தார். இதன் மூலம் தமிழ் தாய் நகர், தாமரை நகர், முருகசாமி தோப்பு, காளியம்மா தோப்பு, வாணரப்பேட்டை அதனை சுற்றி உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.
பொதுப்பணி துறை மெக்கானிக் கணேசன், தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ரவி, அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.