/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறார் நீதிமன்ற பொறுப்பாளர்கள் தேர்வு செய்ய கமிட்டி அமைப்பு
/
சிறார் நீதிமன்ற பொறுப்பாளர்கள் தேர்வு செய்ய கமிட்டி அமைப்பு
சிறார் நீதிமன்ற பொறுப்பாளர்கள் தேர்வு செய்ய கமிட்டி அமைப்பு
சிறார் நீதிமன்ற பொறுப்பாளர்கள் தேர்வு செய்ய கமிட்டி அமைப்பு
ADDED : பிப் 06, 2025 06:58 AM
புதுச்சேரி; குழந்தைகள் நல குழு மற்றும் சிறார் நீதிமன்ற பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களும், சிறார் நீதிமன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு தலைவர், 4 உறுப்பினர்களும், சிறார் நீதிமன்றத்தில் 2 உறுப்பினர்கள் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சிறார் நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் நல குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு கமிட்டியை புதுச்சேரி அரசு நியமித்துள்ளது. தேர்வு குழுவின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வாசுகி தலைவராகவும், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குநர் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், சட்டக்கல்லுாரி உதவி பேராசிரியர் லலிதா திரிபுர சுந்தரி, புதுச்சேரி பல்கலைக்கழக சமூக பணி பேராசிரியர் நளினி, கருணாலயம் கிராமப்புற நலச்சங்கம் இயக்குநர், பி.எம்.எஸ்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.